Friday, November 5, 2010

காதல் குருடர்கள்!

கண்ணுக்குள் உன்னை வைத்தே 
கண்ணிமை மூடி வைத்தேன்!

கல், கண்ணாடி கால்களைத் தீண்டியும் 
குருடனாயிருந்தேன் - கண் திறக்காமல்!

திறந்தால்... தூசு தீண்டுமே!
உன் பிம்பத்தை! 

Tuesday, August 24, 2010

உயிர்

இலையின்றி கிளையின்றி
உயிரின்றி நின்றது!

'பட்டமரம்' என்றார்கள்!
பாவம் மூடர்கள்!

அது உன்
பார்வை 'படாத மரம்'
என்பதை நான் மட்டும் அறிவேன்!